🛑புயலின் தோற்றம்:
- வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறாது எனவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கும் எனவும், இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது. இந்தநிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே வலுவடைந்து புயலாகவே அது கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெஞ்சல் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே புதுச்சேரிக்கு அருகில் சனிக்கிழமை பிற்பகலில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
🛑புயலின் நிலவரம்:
- ஃபெஞ்சல் புயல் தற்போது சென்னையில் இருந்து 190 கி.மீ தூரத்திலும் புதுச்சேரியில் இருந்து 180 கி.மீ தொலைவிலும் உள்ளது. ஃபெஞ்சல் புயல் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. புயலின் நகரும் வேகம் குறைந்துள்ளதால் கரையை கடக்க தாமதம் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும் ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (30ம் தேதி) அதி கன மழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
🛑 புயலின் பாதிப்பு:
- கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காலை 11.30 மணியளவில் வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்மேற்கே 120 கிமீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. கடலூருக்கு வடக்கே 30 கிமீ தொலைவிலும், விழுப்புரத்திற்கு கிழக்கே 40 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்து வருவதால், கிழக்குக் கடற்கரை சாலை மாமல்லபுரம் பகுதியில் சூறாவளிக் காற்று வீசுகிறது. புயல் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ள நிலையில், திருவாரூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசுகிறது.
- பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. தமிழ்நாட்டைப் பொருத்தவரை சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.
- தொடர்ந்து மழை பெய்தபடி இருந்ததால் சனிக்கிழமை மாலை சென்னையின் பல இடங்களில் நீர் தேங்கத் தொடங்கியது. சென்னை விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
- ஃபெஞ்சல் புயல் கரையை கடந்துவிட்ட நிலையில் விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கணிசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சியில் லேசான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை படகு மூலம் அதிகாரிகள் மீட்டு வருகின்றனர்.
- புயலுக்குப் பிறகு புதுச்சேரியின் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதை ட்ரோன் காட்சிகளில் நம்மால் பார்க்க முடிந்தது. கிருஷ்ணா நகர் பகுதியில் ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டது. அதே நேரம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்களது பகுதிக்கு எந்தவிதமான உதவியும் வரவில்லை என குற்றம்சாட்டினர்.
- அரசு உரிய மீட்பு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி தெரிவித்தார்.
- புயல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுக்களை அனுப்பி வைக்கும்படி மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைக்க உள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
- புதுச்சேரியில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 46 சென்டி மீட்டர் மழை பதிவாகி, பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.
|
"This Content Sponsored by Buymote
Shopping app |
|
Buymote
E-Shopping Application is One of the Online Shopping App |
|
Now
Available on Play Store & App Store (Buymote E-Shopping) |
|
Click
Below Link and Install Application: |
|
Sponsor
Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping
#buymoteapplication" |

Post a Comment