Electricity Bill | கரண்ட் பில்லை குறைக்க வேண்டுமா... அப்போ இத மட்டும் பண்ணுங்க போதும்!
1. 👇
சமீப காலங்களில் வீடுகளின் மின்கட்டணம் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கரண்ட் பில்லை குறைக்க மக்கள் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். தேவையில்லாமல் மின்விசிறிகள் மற்றும் விளக்குகள் ஓடாமல் பார்த்துகொள்கின்றனர்.
2. 👇
பலர் கரண்ட் பில்லை குறைக்க எல்இடி (LED) பல்புகளை பயன்படுத்துகின்றனர். வேறு சிலரோ எல்இடி டியூப் லைட்டைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த எல்இடி பல்புகளும், எல்இடி டியூப் லைட்டுகளும் உண்மையில் கரண்ட் பில்லைக் குறைக்குமா.. இதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.
3. 👇
சாதாரண பல்புகளை விட எல்இடி பல்புகள் 60 முதல் 80 சதவீதம் குறைவான மின்சாரத்தை பயன்படுத்துகின்றன. மேலும் அவை அதிக வெளிச்சம் தருகின்றன. அதோடு நீண்ட நாட்கள் பயன்படுத்தப்படுகின்றன. எல்இடி பல்புகள் மற்றும் எல்இடி டியூப் லைட்கள் வழக்கமான விளக்குகளை விட மிகக் குறைவான வெப்பத்தையே உருவாக்குகின்றன. இது வீட்டை குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். இவை ஏர் கண்டிஷனரின் அழுத்தத்தையும் குறைக்கிறது.
4. 👇
எல்இடி பல்புகளும், எல்இடி டியூப் லைட்டுகளும் ஒரே தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டாலும், மின்னோட்டத்தைப் பயன்படுத்தி ஒளியைக் கொடுக்கும் திறன் இரண்டுக்கும் வித்தியாசமானது. எல்இடி பல்புகள், எல்இடி டியூப் லைட்டுகள் பற்றி அறிந்தவர்கள் வெகுசிலரே.
5. 👇
எல்இடி பல்புகளை இன்றைய காலகட்டத்தில் பலர் பயன்படுத்தி வருகின்றனர். வீடுகள் முதல் தொழிற்சாலைகள் வரை அனைவரும் எல்இடி விளக்குகளைப் பயன்படுத்துகின்றனர்.
6. 👇
எல்இடி பல்புகள் மற்றும் எல்இடி டியூப் லைட்டுகளில் எது சிறந்தது?. வீட்டுத் தேவைக்கு ஏற்ப அதனை தேர்வு செய்ய வேண்டும். எல்இடி டியூப் லைட்டுகளை விட எல்இடி பல்புகள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகின்றன. ஆனால் எல்இடி பல்புகளை விட எல்இடி டியூப் லைட் குறைவான வெளிச்சத்தையே தருகின்றன.
7. 👇
8. 👇
அறை சிறியதாக இருந்தால், எல்இடி டியூப் லைட்டைப் பயன்படுத்துங்கள். ஆனால் குளியலறையில் எல்இடி பல்ப் போட்டால் போதும். வழக்கமான பல்புகள் மற்றும் டியூப் லைட்டுகளுக்கு பதிலாக எல்இடி பயன்படுத்தினால் உங்கள் மின் கட்டணத்தை குறைக்கலாம்.
9. 👇
குறிப்பு: இது இணையத்தில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது
Nice Sis...
ReplyDeletePost a Comment